/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரசாரத்தில் பட்டாசு வெடிப்பு பா.ம.க.,வினர் சாலை மறியல்
/
பிரசாரத்தில் பட்டாசு வெடிப்பு பா.ம.க.,வினர் சாலை மறியல்
பிரசாரத்தில் பட்டாசு வெடிப்பு பா.ம.க.,வினர் சாலை மறியல்
பிரசாரத்தில் பட்டாசு வெடிப்பு பா.ம.க.,வினர் சாலை மறியல்
ADDED : ஏப் 10, 2024 07:38 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தேர்தல் பிரசாரத்தில் வெடித்த பட்டாசு, கார் மீது விழுந்ததால் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், காணை அடுத்த பெரும்பாக்கத்தில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை, ஆதரித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க.,வினர் சாலையில் பட்டாசுகளை போட்டு வெடித்தனர்.
அதனைக் கண்ட அவ்வழியே காரில் வந்த பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி, காரை பிரசாரம் நடக்கும் இடத்திற்கு அருகே நிறுத்தினார்.
அப்போது பட்டாசு பாலசக்தியின் கார் கதவில் பட்டு பக்கவாட்டில் வெடித்து சிதறியது.
அதனைக் கண்ட பாலசக்தி, பட்டாசு வெடித்த தி.மு.க., நிர்வாகியை கண்டித்தார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் அங்கிருந்த போலீஸ்காரர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினார். அதனைத் தொடர்ந்து லட்சுமணன் எம்.எல்.ஏ., பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
அதன்பிறகு பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாலை 5:45 மணிக்கு, கார் மீது பட்டாசை போட்டவரை கைது செய்ய வலியுறுத்தி கட்சி நிர்வாகிகளுடன் பெரும்பாக்கம் - திருக்கோவிலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டார். அவர்களிடம் காணை போலீசார் வழக்கு பதிவு செய்வதாக கூறியதை ஏற்று மாலை 6:30 மணிக்கு பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு திருவெண்ணெய்நல்லுார் கடை வீதியில் நகர செயலாளர் வெங்கட் நாராயணன், ஒன்றிய செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமையில் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து இரவு 7:40 மணிக்கு மறியலை விலக்கிக் கொண்டனர்.

