/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பில் வறட்சி மேலாண்மை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
/
கரும்பில் வறட்சி மேலாண்மை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பில் வறட்சி மேலாண்மை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பில் வறட்சி மேலாண்மை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
ADDED : ஏப் 24, 2024 03:07 AM
செஞ்சி : கரும்பு பயிரில் வறட்சியை சமாளிக்க ராஜ்ஸ்ரீ சரக்கரை ஆலை சார்பில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
செஞ்சி அடுத்த செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரும்பு அறுவடை பணி தீவரமாக நடந்து வருகிறது. கரும்பு அறுவடை முடிந்த வயல்களில், கரும்பு தோகையை தீயிட்டு எரிப்பதற்கு பதில், தோகையை அப்படியே காலில் விடுவதும், ஒரு கால் விட்டு ஒரு காலில் பரப்பி விடுவதும் மற்றும் இயந்திரம் மூலம் பொடியாக்க வேண்டும்.
இதன் மூலம் ஒரு ஏக்கரில் விழும் தோகை 4 டன் எருவாக கிடைக்கும். மேலும் மண்ணின் ஈரப்பதம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் மற்றும் மண் புழு அதிகரித்து மண்ணின் வளம் காக்கப்படும்.
இந்த செயல்முறையை அந்தந்த கோட்டத்தில் உள்ள கரும்பு அலுவலகத்தை அணுகி அங்கு செயல்படும் இயந்திர சேவையாளர்கள் மூலம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து கரும்பை பாதுகாக்க ஒரு கால் விட்டு ஒரு காலில் தண்ணீர் பாய்ச்சும் பாசன முறையை பயன்படுத்த வேண்டும்.
மற்றும் கால்வாய் பாசன முறையை தவிர்த்து நேரிடையாக கருப்பு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீர் சேமிக்கப்படும்.
இளம் பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டால் 100 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிலோ யூரியா மற்றும் 2.5 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் கரைத்து பயிரின் மீது தெளிக்கலாம். வளர்ந்த பயிருக்கு ஏக்கருக்கு 50 கிலோ வீதம் கூடுதலாக பொட்டாஷ் உரத்தை வறட்சி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இட்டு நீர் பாய்ச்சலாம்.
மேலும் மிக முக்கிய தொழில் நுட்பமான சொட்டு நீர் குழாய் மூலம் பயிர்கள் வறட்சி பாதிப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

