/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டுமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்க கோரிக்கை
/
கட்டுமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்க கோரிக்கை
கட்டுமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்க கோரிக்கை
கட்டுமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரி குறைக்க கோரிக்கை
ADDED : செப் 16, 2024 05:21 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட கட்டுமானம், மனை தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ஏழுமலை, துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார். இதில், மாநில பொருளாளர் யுவராஜ், மாவட்ட இணைச்செயலாளர் தாஸ், நிர்வாகிகள் டேவிட், அன்பு, வெங்கடேசன், நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கட்டுமான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். கட்டுமான தொழிலை பாதுகாக்க, தனி துறை ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை நிர்ணயம் செய்வதற்கு, உற்பத்தியாளர்கள், உபயோகிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். நிலம், மனை தொழில்களில் ஈடுபடுவோரை அமைப்புசாரா தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

