/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பராமரிப்பில்லாத மனைகளை அபகரிக்கும் முயற்சி தீவிரம் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் தாதாக்கள்

ADDED : மே 14, 2024 05:59 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பராமரிப்பில்லாத வீட்டு மனைகளை குறிவைத்து உரிமை கொண்டாடும் முயற்சியில் அதிகாரிகளை மிரட்டும் தாதாக்கள் கிளம்பியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கிராமப்புறங்கள் அதிகமாக நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
பெரும்பாலானோர் இந்த மாவட்டத்தில் வீடு, காலி மனைகள் உள்ளிட்ட சொத்துகள் இருந்தாலும், வெளி மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் பிழைப்பதோடு, தங்களின் குடும்பத்தாரையும் அங்கேயே அழைத்து சென்று விடுகின்றனர்.
இது போன்றவர்களின் சொத்துக்களான வீடு, காலி மனைகளை ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது சில ஆண்டுகள் கழித்து தான் வந்து பார்க்கின்றனர்.
இது போல், மாவட்டத்தில் உள்ள பராமரிப்பில்லாத சொத்துகளை ஒரு சிலர் குறிவைத்து, வருவாய் துறை அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு வீடு, காலி மனைகளை திருத்தம் செய்து முறைகேடாக வாங்கி, வேறு நபருக்கு விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், விக்கிரவாண்டியில் மண்டல துணை தாசில்தார் பொறுப்பில் உள்ள ஒருவரை, காலி மனையை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிய சிலர் பட்டாவை திருத்தம் செய்யவில்லை என மிரட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போத இது போன்ற பிரச்னை பல இடங்களில் தீவிரமாக நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தலையிட்டு, மற்றவர் சொத்துகளை அபகரிக்க நினைப்பவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.