/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரு வீதியில் தொடரும் போக்குவரத்து விதி மீறல்
/
நேரு வீதியில் தொடரும் போக்குவரத்து விதி மீறல்
ADDED : ஜூன் 04, 2024 11:39 PM
திண்டிவனம்: திண்டிவனம் நேரு வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்குபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நேரு வீதியில், தாலுகா அலுவலகம், காய்கறி மார்க்கெட், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அமைந்துள்ளன.
பஸ் நிலையத்திலிருந்து செஞ்சி, வந்தவாசி, திருவண்ணாமலை, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் நேரு வீதி வழியாக செல்கின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சமீபத்தில் நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில், வீதி, புதுமசூதி வீதி என ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் எதிரும், புதிருமாக மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக நேரு வீதியில் காலை 8:00 மணிக்குள் லாரிகளில் கொண்டு வரப்படும் சரக்குகளை வியாபாரிகள் இறக்கிக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுத்தியிருந்தனர்.
ஆனால் போலீசாரின் உத்தரவை மீறி காலை 10:00 மணியிலிருந்து பிற்பகல் 1:00 மணி வரை லாரியை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி, சரக்குளை இறக்குகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறி லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குபவர்களை திண்டிவனம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விதிமுறைகளை மீறி வாகனங்களை நேரு வீதியில் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

