/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூமிஸ்வரன், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்தது
/
பூமிஸ்வரன், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்தது
பூமிஸ்வரன், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்தது
பூமிஸ்வரன், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்தது
ADDED : ஆக 12, 2024 06:22 AM

மரக்காணம்: மரக்காணம் பூமிஸ்வரன், ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மழைநீர் புகுந்தது.
மரக்காணத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூமிஸ்வரன் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. அதேபோல் மரக்காணம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திலும் மழை நீர் புகுந்தது.
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, அகரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. கழுவெளி ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வண்டிப் பாளையம், கோட்டிகுப்பம், நடுக்குப்பம், கிளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு மரக்காணம் வழியாக 20 கி.மீ., சுற்றிச் செல்கின்றனர்.