/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு 'அட்வைஸ்'
/
பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு 'அட்வைஸ்'
பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு 'அட்வைஸ்'
பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் டிரைவர், கண்டக்டர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : ஏப் 04, 2024 01:00 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் மகளிர் உள்ளிட்ட அனைத்து பயணிகளிடமும், கனிவுடன் நடத்துகொள்ள வேண்டும் என, டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் அர்சுனன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், டவுன் பஸ்கள் இயக்கத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அவர்கள் அறிவுரைகள் வழங்கினர்.
குறிப்பாக, டவுன் பஸ்களை இயக்கும்போது, அனைத்து பஸ் நிறுத்தங்கள் வழியாக முறையாக சென்றும், அனைத்து அட்டவணையிடப்பட்ட நிறுத்தங்களிலும் முறையாக பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிட வேண்டும்.
பயணிகள் பஸ்சில் ஏறி, இறங்கியதை உறுதி செய்த பின்னர் தான், பஸ்சை எடுக்க வேண்டும்.
இலவசமாக பயணிக்கும், பெண் பயணிகள் உள்பட அனைத்து பயணிகளிடமும், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மகளிர், பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், என அறிவுரை வழங்கினர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பஸ்களில் ஏறி இறங்கும் போது, அவர்களுக்கு உதவி செய்வதுடன், பயணத்தின்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், அவர்கள் அமர உதவி செய்திட வேண்டும் என அறிவுரைகள் வழங்கினர். வணிக பிரிவு துணை மேலாளர் சிவக்குமார், உதவி மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மகளிர் இலவச பயணம் செய்வதால், பல பஸ் நிறுத்தங்களில், டவுன் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வரும் நிலையில், போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த அறிவுரை வழங்கியுள்ளனர்.

