ADDED : ஏப் 07, 2024 04:46 AM

விழுப்புரம்,: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
இ.எஸ்., கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் அகிலா கல்லுாரி ஆண்டறிக்கை வாசித்தார். கோவை, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நுண்ணயிரியல் துறை இணை பேராசிரியர் ராஜேந்திரன், பெண்களின் ஆளுமைத்திறன் மேம்பாடு.
பெண் கல்வியின் அவசியம், பெண் சாதனையாளர்கள், பெண் சார்ந்த தொழில் முனைவு திறன்கள், பெண்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் பற்றி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, துறை சார்ந்த முதன்மைப் பாடங்களில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு திறமைக்கான கற்றல் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கல்லுாரியில் சிறந்த பன்திறன் சார் விருது மற்றும் நிர்வாகம் மூலம் அளிக்கும் மடிக்கணினி முதுகலை முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கீர்த்தனாவிற்கு வழங்கப்பட்டது. பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

