/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் பிரசாரம்

ADDED : ஏப் 03, 2024 02:50 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் பா.ம.க.,வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து வீடு, வீடாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரம் கொடுத்து ஓட்டு சேகரித்தனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.,சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.
திண்டிவனம் நகராட்சி 10வது வார்டு டாக்டர் ராமதாஸ் நகரிலிருந்து நேற்று காலை மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு சேகரித்தனர்.
பிரசாரத்தை பா.ம.க.,மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எஸ்.சுப்ராயலு துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ், சமூக நீதி பேரவை நிர்வாகி பாலாஜி, மாநில வன்னியர் சங்க துணைச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் அருள்மொழி, மாவட்ட தலைவர் பாவாடைராயன், முன்னாள் செயலாளர் சம்பத், நகர செயலாளர் ராஜேஷ், கவுன்சிலர்கள் ேஹமமாலினி, மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் ராஜி, பூதேரி ரவி பங்கேற்றனர்.
பா.ஜ., சார்பில் திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேசபெருமாள், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், வழக்கறிஞர் முருகன், விநாயகம் மற்றும் ஓ.பி.எஸ்., அணி நகர செயலாளர் தம்பி ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.