/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 04, 2024 01:01 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் பாக்யராஜ், ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் கஜேந்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை செயாளரான அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். திண்டிவனம் நகர ஜெ.,பேரவை செயலாளர் வழக்கறிஞர் ரூபன்ராஜ் வரவேற்றார். நகர செயலாளர் தீனயதயாளன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில ஜெ.பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெ.,பேரவை அவைத்தலைவர் மலர்சேகர், மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் டி.கே.குமார், வடபழனி, கார்த்திக், சக்திபெரியதம்பி, விஜயகுமார், சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ரவி, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சக்கரவர்த்தி, சித்தாமூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், பாசறை செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், கார்த்திக், ஐ.டி., பிரிவு சவுகத்அலி, கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன், சரவணன், நிர்வாகிகள் ஜெயவேல், திருப்பதியார்சங்கர், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

