/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 11, 2024 04:53 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ் ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார்.
விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ், விக்கிரவாண்டி தொகுதியில் வி.சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து நேற்று பிரசாரத்தை துவக்கினார். வி.சாலை, வி.சாத்தனுார், கொட்டியாம்பூண்டி, தும்பூர், தாங்கல், அசோகபுரி ,தென்பேர், புதுப்பாளையம் உட்பட பல கிராமங்களில் முன்னாள் அமைச்சர் சண்முகம் வேட்பாளர் பாக்ராஜிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் ,பெண்கள் மத்தியில் தேர்தல் வாக்குறுதிகளை கூறி, ஓட்டு சேகரித்தார். அனைத்து இடங்களிலும் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் .
தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன், நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர்கள் சரவணக்குமார், ஜோதிராஜா, தலைவர் பழனி, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் பிரஸ்குமரன், முன்னாள் சேர்மன் நாகப்பன், அணி செயலாளர்கள் திருநாவுக்கரசு, அன்பரசு, பேரவை துணை தலைவர் பெரியான், பிரதிநிதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன், துணை செயலாளர் பழனியம்மாள், மகளிரணி கலையரசி, தொழில் நுட்பபிரிவு அந்துவான், ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் சூடாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், ஜெயமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

