/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'கவனிக்கும்' இடத்தில் பா.ம.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சு
/
'கவனிக்கும்' இடத்தில் பா.ம.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சு
'கவனிக்கும்' இடத்தில் பா.ம.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சு
'கவனிக்கும்' இடத்தில் பா.ம.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : மார் 27, 2024 07:12 AM
வானுார் : 'கவனிப்பு' எங்கு கிடைக்கிறதோ அங்கு பா.ம.க., கூட்டணி வைக்கும்' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சக்கரபாணி பேசினார்.
வானுாரில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ், அறிமுக கூட்டத்தில் அவர் பேசுகையில், 'லோக்சபா தேர்தலில், எந்த பகுதியிலும் அ.தி.மு.க.,விற்கென ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க., தாழ்த்தப்பட்டவர், மீனவர், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி.
ஜாதி, மதம் பார்க்காத கட்சி என்பதால், அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.,வை மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் பா.ஜ., - பா.ம.க.,வை மக்கள் யாரும் விரும்பவில்லை. 'கவனிப்பு' எங்கு கிடைக்கிறதோ, அங்கு பா.ம.க., கூட்டணி வைக்கும். நமக்கு வெற்றி நிச்சயம். அ.தி.மு.க., தனித்து நின்றாலும், வெற்றி பெறும். இந்த தொகுதியில் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளைப் பெற்று தந்துள்ளோம். இந்த முறை அதிக ஓட்டுகளைப் பெற்று வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்' என்றார்.