sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

/

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 30, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்து,45; கூலி தொழிலாளி. இவர், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அரியந்தாங்கல் சாலையில் உள்ள டீ கடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, முன்விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் மூர்த்தி,31; தட்சணாமூர்த்தி, 57; பெருமாள் மகன் பிச்சை,40; சின்னையா மகன் அர்ஜூனன், 40; ஆகியோர் சேர்ந்து முத்துவை கத்தியால் குத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த பிரம்பதேசம் போலீசார், அவர்கள் மீது திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அருணகிரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி தனம், குற்றம் சாட்டப்பட்ட மூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2,500 அபராதமும், தட்சணாமூர்த்திக்கு ரூ.2,500 அபராதம், பிச்சைக்கு ரூ.1,000 அபராதம் விதித்தும், அர்ஜூனனை வழக்கில் இருந்த விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us