/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மறைத்து வைத்த சாவியை எடுத்து 11 பவுன் 'அபேஸ்'
/
மறைத்து வைத்த சாவியை எடுத்து 11 பவுன் 'அபேஸ்'
ADDED : ஆக 11, 2024 06:01 PM
ஒடுகத்துார் : ஒடுகத்துார் அருகே, விவசாயி வீட்டில், 11 பவுன் நகை திருட்டு போனது.
வேலுார் மாவட்டம் ஒடுகத்துாரை அடுத்த கொத்துாரை சேர்ந்த விவசாயி ஜெயகுமார், 42; இவர் மனைவி திலகா, 37, பழ வியாபாரி; நேற்று அதிகாலை ஜெயகுமார் விவசாய நிலத்திற்கு சென்ற நிலையில், திலகா பழ வியாபாரத்துக்கு சென்றார். சாவியை வழக்கம்போல் மறைவிடத்தில் வைத்து விட்டு சென்றனர். காலை, 8:00 மணிக்கு திரும்பிய திலகா, கதவை திறந்து உள்ளே சென்றார். பீரோவில் வைத்திருந்த, 11 பவுன் நகை திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டு சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்ட யாரோ, சாவியை எடுத்து வீட்டை திறந்து நகையை திருடி சென்றுள்ளனர். புகாரின்படி வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

