/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சாலை பணிகளில் கோல்மால் வேலுார் மாநகராட்சியில் சர்ச்சை
/
சாலை பணிகளில் கோல்மால் வேலுார் மாநகராட்சியில் சர்ச்சை
சாலை பணிகளில் கோல்மால் வேலுார் மாநகராட்சியில் சர்ச்சை
சாலை பணிகளில் கோல்மால் வேலுார் மாநகராட்சியில் சர்ச்சை
ADDED : டிச 19, 2025 04:43 AM

வேலுார்: வேலுார் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சுஜாதா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 50வது வார்டு அ.தி.மு.க., -- கவுன்சிலர் அருணா கூறுகையில், ''என் வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் கிழக்கில், 10 மாதத்திற்கு முன், மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. விடுபட்ட சாலைகளை அமைத்து தர மனு அளித்திருந்தோம்.
அதில், ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை மீண்டும் அமைத்து தருவதாக பதில் கடிதத்தை, மண்டல உதவி கமிஷனர் அனுப்பியுள்ளார். அதிகாரிகள் கள ஆய்வு செய்யாமல், அதே இடத்தில் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் சுஜாதா, ''தவறுதலாக நடந்துள்ளது. விடுபட்ட சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
துணை மேயர் சுனில் குமார் கூறுகையில், ''மேயர் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார். காட்பாடி தொகுதி என்றால் கேவலமாக உள்ளதா?'' என்றார். இதையடுத்து, தி.மு.க., கவுன்சிலர்கள் இருதரப்பாக பிரிந்து, அமைச்சர் துரைமுருகன் ஆதரவு கவுன்சிலர்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

