/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
/
வேலுாரில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
வேலுாரில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
வேலுாரில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கிறது ஐ.எச்.சி.எல்.,
ADDED : டிச 19, 2025 04:49 AM
வேலுார்: ஐ.எச்.சி.எல்., எனப்படும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி நிறுவனம், வேலுார் மாவட்டத்தில், 'விவாண்டா' நட்சத்திர ஹோட்டலை அமைக்கிறது. இந்த ஹோட்டல், 100 தங்கும் அறைகளுடன், கூட்ட அறை, உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.
இதுகுறித்து, ஐ.எச்.சி.எல்., நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டிற்கான நிர்வாக துணை தலைவர் சுமா வெங்கடேஷ் கூறியதாவது:
கல்வி மற்றும் தொழில் துறை மையமாக வேலுார் திகழ்கிறது. மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வேலுார் இடம் பெற்றிருப்பது, நகரின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இது, விரும்தோம்பல் துறையின் சந்தையாக திகழ்கிறது. அங்கு, பி.பி.கே., குழுமத்துடன் இணைந்து, விவாண்டா ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.