/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கடலுார் ரயில்வே கேட் விபத்து 11 பேர் விசாரணைக்கு ஆஜர்
/
கடலுார் ரயில்வே கேட் விபத்து 11 பேர் விசாரணைக்கு ஆஜர்
கடலுார் ரயில்வே கேட் விபத்து 11 பேர் விசாரணைக்கு ஆஜர்
கடலுார் ரயில்வே கேட் விபத்து 11 பேர் விசாரணைக்கு ஆஜர்
ADDED : ஜூலை 11, 2025 02:50 AM
திருச்சி:கடலுார் ரயில்வே கேட்டில், பள்ளி வாகனம் மீது ரயில் மோதி, மூன்று மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, 11 பேர் ஆஜராகினர்.
செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் ஜூலை 8ல் பள்ளி வாகனம் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி, மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
கேட் கீப்பராக பணியாற்றி வந்த பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து தெற்கு ரயில்வே தலைமையகம் சார்பிலும் திருச்சி கோட்டம் சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
விபத்தின் போது பணியில் இருந்த கேட் கீப்பர், ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட் மற்றும் ஆலம்பாக்கம், கடலுார் ரயில் நிலைய மேலாளர்கள், கடலுார் இருப்புப்பாதை பொறியாளர்கள், ரயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலுார் பகுதியின் முதன்மை லோகோ ஆய்வாளர்கள், விபத்துக்குள்ளான பள்ளி வாகன டிரைவர் உட்பட, 13 பேர், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு, ஜூலை, 10ல், விசாரணைக்கு வருமாறு ரயில்வே நிர்வாகத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் முன்னிலையில், நேற்று, 11 பேர் ஆஜராகினர்.வேன் டிரைவர் சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், 13 பேரில் 11 பேர் திருச்சி கோட்ட அலுவலகத்தில் ஆஜராகினர்.

