/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி
தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி
தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து நான்கரை வயது குழந்தை பலி
ADDED : ஏப் 23, 2024 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்து, நான்கரை வயது குழந்தை உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள செவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் மொண்டிப்பட்டியில் உள்ள டி.என்.பி.எல்., நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நான்கரை வயது மகன் கனகவேல். நேற்று மாலை, 3 மணியளவில், வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டி அருகே கனகவேல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தொட்டியின் ஒரு பக்க சுவர் இடிந்து, கனகவேல் மீது விழுந்தது. இதில் கனகவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.