/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
ஒளிந்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
/
ஒளிந்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ஒளிந்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ஒளிந்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ADDED : மே 08, 2025 01:24 AM
ஆரணி,:ஆரணி அருகே, நண்பர்களுடன் ஓடி ஒளிந்து விளையாடியபோது, சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த அரியாத்துாரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பவித்ரன், 9. கஸ்தம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று தன் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
பூத்தாளம் என்பவரின் வீட்டில் ஒளிந்தபோது, அங்கு மின்சார எர்த் வயர் பழுதால், மின்கசிவு ஏற்பட்டிருந்தது. அதை அறியாமல் அவர் அதை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.
அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து மின் இணைப்பை துண்டித்து, சிறுவனை மீட்டு, வடமாதிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதுபோல, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே செங்குணம் பஞ்., அலுவலகம் நேற்று மூடப்பட்டிருந்த நிலையில், திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
போளூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் நாசமாகின.

