/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுக்கொண்டதை அமலாக்க ஏன் தாமதம்?
/
ஏற்றுக்கொண்டதை அமலாக்க ஏன் தாமதம்?
ADDED : பிப் 05, 2024 01:19 AM

திருப்பூர்;அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச நிதி சாராத கோரிக்கைகளை உடனடியாக அமலாக்க கோரி, 'டிட்டோஜாக்' சார்பில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை வகித்தார்.
'டிட்டோ ஜாக்' ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். கடந்த 2023, அக்டோபர் மாதம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 'டிட்டோ ஜாக்' அமைப்புடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச நிதி சாராத கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும்.
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை, மாநில அளவிலான முன்னுரிமையாக மாற்றியது; இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிப்புக்கு காரணமான, அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரியும், கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

