/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது
/
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது
ADDED : டிச 12, 2025 06:14 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான, 5565 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நேற்றுமுதல் துவங்கியுள்ளது.
வரும் 2026ல், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த அக்டோபர் 27 நிலவரப்படி, மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2536 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியபடி, மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடந்த 4ம் தேதி, புனேவிலிருந்து, கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட்டில் பொருத்துவதற்கான புதிய பேட்டரிகள், கன்டெய்னர் லாரியில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திறங்கின; அவை, இருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, பெங்களூரு பெல் நிறுவன இன்ஜினியர் குழுவினர் ஒன்பது பேர், திருப்பூர் வந்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம், நேற்று காலை திறக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, இன்ஜினியரிங் குழுவினரால் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் துவங்கப்பட்டது.
---
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு சோதனைக்குப் பின்பே ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

