/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரோடையை துார்வாரிய கிராம மக்கள் : செவிசாய்க்காத அதிகாரிகளுக்கு பதிலடி
/
நீரோடையை துார்வாரிய கிராம மக்கள் : செவிசாய்க்காத அதிகாரிகளுக்கு பதிலடி
நீரோடையை துார்வாரிய கிராம மக்கள் : செவிசாய்க்காத அதிகாரிகளுக்கு பதிலடி
நீரோடையை துார்வாரிய கிராம மக்கள் : செவிசாய்க்காத அதிகாரிகளுக்கு பதிலடி
ADDED : டிச 14, 2025 07:46 AM

அ திகாரிகள் செவிசாய்க்காததால் ஓடையைக் காக்க, பல்லடம் அருகே மக்களே களமிறங்கினர்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி எல்லைப் பகுதியில், நீரோடை செல்கிறது. ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் கிராமங்கள் வழியாக செல்லும் இந்த நீரோடை நொய்யல் ஆற்றுடன் இணைகிறது.
மழைநீர் செல்லும் இந்த நீரோடை, சமீப காலமாக, சாக்கடை நீர் மற்றும் குப்பைகள் செல்லும் கழிவுநீர் ஓடையாக மாறி விட்டது. கழிவு நீரும், குப்பைகளும் தேங்கி துர்நாற்றம் வீசி வரும் இந்த ஓடையை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, துார்வாரி சுத்தம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கேட்டுள்ளோம். ஆனால், ஓடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், குவிந்துள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி, ஓடையை துார்வரவும் அதிகாரிகள் முன் வரவில்லை.
எனவே, இனி அதிகாரிகளை நம்பி பய னில்லை என்று கருதி, நாங்களே ஓடையை தூர்வாரினோம். கடந்த சில மாதங்களுக்கு முன், இதேபோல் ஓடையை துார் வாரினோம். அதிகாரிகள் அலட்சியத்தால், ஓடை மீண்டும் மாசடைந்தது. எனவே, நாங்களே எங்கள் சொந்த செலவில் மீண்டும் ஓடையை துார் வாரினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காணிப்பு அவசியம்: நீரோடையில், கோழி, இறைச்சி, மீன் கழிவுகள், சலுான், கட்டட கழிவுகள், அழுகிய காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், கடும் துர்நாற்றம், கொசு புழுக்கள், விஷ ஜந்துக்களால் குடியிருப்புகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இனியாவது, நீரோடையில் கழிவுகள் குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறுமுத்தாம்பாளையம் கிராம மக்கள்.:

