/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எகிறும் பந்தல் காய்கறிகள் விலை; பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு
/
எகிறும் பந்தல் காய்கறிகள் விலை; பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு
எகிறும் பந்தல் காய்கறிகள் விலை; பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு
எகிறும் பந்தல் காய்கறிகள் விலை; பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு
ADDED : டிச 30, 2025 07:22 AM
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், விளைநிலங்களில், பந்தல் அமைத்து, காய்கறி உற்பத்தியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணற்றுப்பாசனத்தில், சொட்டு நீர் பாசன முறை; நேரடியாக நாற்று நடவு முறையை பின்பற்றுவதால், ஆண்டு முழுவதும் இவ்வகை சாகுபடியில், ஈடுபடுகின்றனர். விளைநிலங்களில், பந்தல் அமைக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பந்தலில், பாகற்காய், பீர்க்கன், புடலை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, பாகற்காய், பீர்க்கன் உள்ளிட்ட சாகுபடிக்கான நாற்றுகளை நடவு செய்தனர்.
கொடி படர்ந்து, பூ விடும் தருணத்தில், பருவமழை துவங்கியது. தொடர் மழை காரணமாக, விளைநிலங்களில், தண்ணீர் தேங்கி, நோய்த்தாக்குதல் பரவியது; தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்ததால், பூக்கள் உதிர்ந்தது. பூ உதிர்வு மற்றும் நோய்த்தாக்குதலால், உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, பந்தல் காய்கறி விலை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, உடுமலை உழவர் சந்தையில், பீர்க்கன் கிலோ, 70-74 ரூபாய்; புடலை, 25-30 ரூபாய்; பாகற்காய் 65-75; சுரைக்காய் 25-30 ரூபாய்க்கு விற்பனையானது. வெளி சந்தைகளில், விலை நிலவரம் கூடுதலாக இருந்தது.

