/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
/
பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
பாத்திரத் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை
ADDED : டிச 22, 2025 05:05 AM

அனுப்பர்பாளையம்: பாத்திரத் தொழிலாளர் புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றன.
அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கடந்த 2023 ஜனவரி மாதம் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம் வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
தொழிலாளர்கள் கூறுகையில், ''கடந்த முறை எவர்சில்வர் பாத்திரத்திற்கு 16 சதவீதமும், பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு 22.2 சதவீதமும், ஈய பூச்சுப் பாத்திரங்களுக்கு 29.5 சதவீதமும் ஒப்பந்தம் போடப்பட்டது.
விலைவாசி உயர்வுக்கேற்ப கடந்த முறையைவிட கூடுதல் சம்பள ஒப்பந்தத்தை பெற்றுத்தர அனைத்து தொழிற்சங்கங்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.
இந்நிலையில், பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் இன்று எல்.பி.எப். அலுவலகத்தில் நடக்கிறது.
''பேச்சுவார்த்தைக்கு வரும்படி உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுப்பது; பேச்சுவார்த்தை மூலம், தொழிலாளர்களுக்கு கடந்த முறையைவிட கூடுதல் சம்பள உயர்வு பெற்று கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்'' என்றனர் தொழிற்சங்கத்தினர்.

