ADDED : செப் 11, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டலத்திற்கு உட்பட்ட, 49 வது வார்டு பத்மினி கார்டனில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் சீராக விநியோகம் செய்வது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் அமித் ஆய்வு செய்தார்.
அப்போது, பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இதுபோல் குடிநீர் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.