/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு விண்ணப்பிக்க 16ம் தேதி வரை அவகாசம்
/
'நீட்' தேர்வு விண்ணப்பிக்க 16ம் தேதி வரை அவகாசம்
ADDED : மார் 12, 2024 04:15 AM
திருப்பூர்: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிக்க, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மூலம் அட்மிஷன் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு மே, 5ம் தேதி 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது.
'நீட்' தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை ஜன., மாதம் வெளியிட்டது. பிப்., 9 முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மார்ச் 9ம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், வரும் 16ம் தேதி வரை கூடுதலாக ஐந்து நாட்கள் விண்ணப்பிப்பவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
'நீட்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத பலருக்கு வரும் 16ம் தேதி இரவு வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பமுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு 73734 - 48484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.

