/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கையேந்துகிறது மாநகராட்சி! ரூ.140 கோடி இருந்தாலே திட்டங்கள் முடியும்
/
கையேந்துகிறது மாநகராட்சி! ரூ.140 கோடி இருந்தாலே திட்டங்கள் முடியும்
கையேந்துகிறது மாநகராட்சி! ரூ.140 கோடி இருந்தாலே திட்டங்கள் முடியும்
கையேந்துகிறது மாநகராட்சி! ரூ.140 கோடி இருந்தாலே திட்டங்கள் முடியும்
ADDED : நவ 29, 2024 07:02 AM

திருப்பூர் : 'அம்ரூத்' திட்டத்தில் செயல்படுத்தப்படும் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றுக்கான செலவு திட்டமிட்டதை விட அதிகமாகியுள்ளது. இதனால், 140 கோடி ரூபாய் கடன் வாங்க மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'அம்ரூத்' திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2017ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கு 2018 ம் ஆண்டில் 604.51 கோடி ரூபாய் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின் 2020ல் பணி துவங்கிய போதே, திட்ட மதிப்பீடு 636.40 கோடியாக அதிகரித்தது. தற்போது இத்திட்டம் 96 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் இதன் மதிப்பீடு 799 கோடி ரூபாய் என 162.48 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.இதை 100 கோடி ரூபாய் நகராட்சி பத்திரங்கள் மூலம் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, மூலதன மானிய நிதி; மாநகராட்சி பொது நிதி ஆகியன மூலம் ஈடு செய்யப்படவுள்ளது.
குடிநீர் திட்டம்:மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள 4வது குடிநீர் திட்டம், அம்ரூத் திட்டத்தில் கடந்த 2017 ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு 2018ம் ஆண்டில் 1063.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கிய நிலையில், 2020 ம் ஆண்டில் இதன் மதிப்பீடு 1120.57 கோடி ரூபாயாக அதிகரித்தது.
பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் திருத்திய மதிப்பீடு 1179.81 கோடி ரூபாய் என ஏறத்தாழ 60 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக, டுபிட்கோ நிறுவனத்தில் 40 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மூல தன மானிய நிதியில் 10 கோடி மற்றும் மாநகராட்சி பொது நிதியில் 9.24 கோடி ரூபாய் வழங்கி ஈடு செய்யப்படவுள்ளது.
இந்த இரு திட்டங்களுக்காக 140 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு, மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் 96 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் இதன் மதிப்பீடு 799 கோடி ரூபாய் என 162.48 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. குடிநீர்த்திட்டத்தின் திருத்திய மதிப்பீடு 60 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

