/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுக்கு சந்தில் சிக்கிய கன்டெய்னர் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
/
குறுக்கு சந்தில் சிக்கிய கன்டெய்னர் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
குறுக்கு சந்தில் சிக்கிய கன்டெய்னர் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
குறுக்கு சந்தில் சிக்கிய கன்டெய்னர் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
ADDED : மார் 10, 2024 12:46 AM

பல்லடம்;பல்லடத்தில், போக்குவரத்து விதிமுறையை மீறி, பகல் நேரங்களிலேயே கனரக வாகனங்கள் இயக்குவது அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கன்டெய்னர் லாரி ஒன்று, டி.எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள குறுக்கு சந்து ஒன்றுக்குள் நுழைய முயன்றது. போதிய இடவசதி இன்றி, லாரி உள்ளே செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், லாரியின் முன்பக்க டயர் பள்ளத்தில் சிக்கியது.
இதனால், முன் பின் செல்ல முடியாமல், லாரி அங்கேயே நின்றது. கன்டெய்னரின் ஒரு பாதி, தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. ஏறத்தாழ, அரை மணி நேரத்துக்கு மேல் போராடிய பின், பள்ளத்தில் இருந்து லாரி வெளியே கொண்டு வரப்பட்டது.
குறுக்கு சந்தில் கன்டெய்னர் லாரி சிக்கியதால், ஒரு பக்கம் வீதிக்குள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்த நிலையில், மற்றொரு பக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.