/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப சாதனங்களை... பாதுகாக்க முடியல!மாற்று திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப சாதனங்களை... பாதுகாக்க முடியல!மாற்று திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப சாதனங்களை... பாதுகாக்க முடியல!மாற்று திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
அரசுப்பள்ளிகளில் தொழில்நுட்ப சாதனங்களை... பாதுகாக்க முடியல!மாற்று திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 02, 2024 10:25 PM
உடுமலை:தேர்தலின் போது, அரசுப்பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடக்க உள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு வழக்கமாக அரசு பள்ளி வளாகங்கள், ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்படுகின்றன.
பல காலமாக அரசு பள்ளிகள் தான், தேர்தல் ஓட்டுச்சாவடி மையங்களாக மாற்றப்படுகின்றன. அவற்றில் குடிநீர், கழிப்பிட வசதிகளை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் செய்து வருகின்றன.
முன்பு, அரசு பள்ளிகளுக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லை. ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் நிலை, பலமடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 90 சதவீத பள்ளிகளில் லேப்டாப், கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா உட்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏப்., மாதம் முதல் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களும் பள்ளிகளில் பொருத்தப்பட உள்ளது. ஆனால், அவற்றுக்கான பாதுகாப்பு வசதிகள் மிககுறைவாகவே உள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திலும், மிக சில பள்ளிகளில் மட்டுமே இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான பள்ளிகளில் பாதுகாவலர்கள் இல்லை.
தேர்தல் நேரங்களில் அனைத்து வகுப்பறைகளும் ஓட்டுப்பதிவு அறைகளாக இருப்பதால், பள்ளிகளின் பொருட்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
கடந்த சில தேர்தலின்போது, கண்காணிப்பு கேமராவின் மைய சர்வர் உட்பட சில பொருட்கள் காணாமல் போய் உள்ளதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இனி வரும் தேர்தல்களில், இதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் பாதுகாப்பான முறையில் பள்ளிகளின் பொருட்களை வைப்பதற்கு கல்வித்துறையும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சவாலாக உள்ளது
அரசு பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளி வகுப்பறைகளில், இப்போது ஸ்மார்ட் அறைகளாக மாற்றப்பட உள்ளன. ஏற்கனவே பல பள்ளிகளில் ஸ்மார்ட் அறைகள் உள்ளன.
அரசுப்பள்ளிகளில், இத்தகைய தொழில்நுட்ப சாதனங்களை பாதுகாப்பாக வைப்பதும் கூட ஆசிரியர்களுக்கு சவாலாகவே உள்ளது.
தேர்தல் ஓட்டுப்பதிவு நாளில் பலரும் பள்ளிக்குள் வந்துசெல்வர். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களும் அங்கு இருப்பதில்லை. அனைவருக்கும் வெவ்வேறு இடங்களில்தான் பணி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பின் பள்ளியில் சென்று பார்க்கும் போது, பல பொருட்கள் காணாமல் போய் இருப்பதும், வளாகம் முழுவதும் குப்பை கூளமாக மாறியும் தான் உள்ளது.
தொழில்நுட்ப சாதனங்கள் இருக்கும் அறையை விடுவித்து, மற்ற அறைகளை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், பள்ளியின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

