/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமைதிப் புறா வடிவத்தில் அணிவகுத்த மாணவர்கள்
/
அமைதிப் புறா வடிவத்தில் அணிவகுத்த மாணவர்கள்
ADDED : செப் 23, 2025 06:07 AM

திருப்பூர்; உலக அமைதி தினத்தை முன்னிட்டு, அவிநாசி அருகே ரேவதி நர்சிங் கல்லுாரி வளாகத்தில், 37 கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 3,203 ரோட்ராக்ட், இன்ட்ராக்ட் மாணவ, மாணவியர் பங்கேற்று, புறா வடிவத்தில் அணிவகுத்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ரோட்டரி கவர்னர் தனசேகரன், மாவட்ட பயிற்றுநர் இளங்குமரன், ஆலோசகர் சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் கவர்னர், இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தனர். ரோட்டரி பவுண்டேஷன் பன்னாட்டு தலைவர் ஹோல்கர் நாக், டிரஸ்ட்டி பரத் பாண்டியா, பன்னாட்டு ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், முன்னாள் தலைவர் இலங்கையை சேர்ந்த ரவீந்திரன், பெங்களூரு ரவிசங்கர் டகோஜூ, மண்டல உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் ஹெலிகாப்டரில், மாணவர்கள் புறா வடிவத்தில், அணிவகுத்து நின்ற காட்சியை பார்வையிட்டனர்.
எலைட் வேர்ல்டு ரெக்கார்டு, இண்டியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டு மற்றும் இன்டர்நேஷனல் ப்ரைடு புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய, மூன்று நிறுவனங்களின் அதிகாரிகள், பார்வையிட்டு உலக சாதனைக்கு பரிந்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்த ரோட்டரி நிர்வாகத்தினரை மாவட்ட கவர்னர் தனசேகரன் பாராட்டி வாழ்த்தினார்.