/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளூர் ஆட்களை புறக்கணித்ததால் வேலை நிறுத்தம்! சுமூக தீர்வுக்கு தொழில் சங்கம் முயற்சி
/
உள்ளூர் ஆட்களை புறக்கணித்ததால் வேலை நிறுத்தம்! சுமூக தீர்வுக்கு தொழில் சங்கம் முயற்சி
உள்ளூர் ஆட்களை புறக்கணித்ததால் வேலை நிறுத்தம்! சுமூக தீர்வுக்கு தொழில் சங்கம் முயற்சி
உள்ளூர் ஆட்களை புறக்கணித்ததால் வேலை நிறுத்தம்! சுமூக தீர்வுக்கு தொழில் சங்கம் முயற்சி
ADDED : செப் 09, 2025 11:20 PM

திருப்பூர்: உள்ளூர் தொழிலாளருக்கு வேலையில்லை என்று கூறி, சூரத்தில் இருந்து தொழிலாளரை அழைத்து வந்ததை கண்டித்து, திருப்பூர் 'சிட்கோ'வில் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.
திருப்பூர் 'சிட்கோ' வளாகத்தில், வெளிமாநிலங்களுக்கு பனியன் ஆடைகளை அனுப்பும், 'புக்கிங்' அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சூரத்தை சேர்ந்த நிறுவனங்களும், பனியன் சரக்கு போக்குவரத்துக்காக திருப்பூரில் 'புக்கிங்' அலுவலகம் நடத்தி வருகின்றன. இதற்காக, நுாற்றுக்கும் அதிகமான சுமை தொழிலாளர்கள், பணியாற்றி வருகின்றனர்.
'சிட்கோ'வில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்று, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி, திடீரென, சூரத்தில் இருந்து, 15 தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர். இதனால், ஏற்கனவே இருந்த தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், நேற்று முதல் வேலை நிறுத்தம் துவக்கியுள்ளனர்.
இது குறித்து, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஏ.டி.பி., சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிமாநில தொழிலாளரை வரவழைத்து வேலை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை; ஆனால், உள்ளூர் தொழிலாளரின் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடாது என்று, கோரிக்கை விடுத்தனர்.
தீர்வு காண முயற்சி இதுகுறித்து சி.ஐ.டி.யு., சுமை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் கூறியதாவது:
நீண்ட நாட்களாக, நுாற்றுக்கும் அதிகமான சுமைப்பணி தொழிலாளர்கள், 'சிட்கோ' வளாகத்தில் பணியாற்றி வருகின்றனர். திடீரென, 'சூரத் தொழிலாளர் போதும்; உள்ளூர் தொழிலாளர் தேவையில்லை' என்று வேலை வழங்குவதை நிறுத்தியுள்ளனர். உள்ளூர் தொழிலாளிக்கு, மாதம், 24 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. சூரத் தொழிலாளியாக இருந்தால், 15 ஆயிரம் ரூபாய் வழங்கினால் போதும் என்று, இவ்வாறு செய்துள்ளனர்.
நீண்ட நாட்களாக பிரச்னை இல்லை; தற்போது, ஒரு சூரத் நிறுவனம், இரண்டாக பிரிந்த போது, ஒரு பங்குதாரர் மட்டும், இவ்வாறு, வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டித்து, வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது; விரைவில், உரிமையாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம். உள்ளூர் மற்றும் வெளிமாநிலம் என, அனைவரையும் சமமாக மதித்து வேலை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய வேண்டுகோள்.
இவ்வாறு, அவர் கூறினார்.