/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரிலிருந்து கேரளாவுக்கு யூரியா கடத்தல்? கூடுதல் விலை கிடைப்பதால் முறைகேடு என புகார்

ADDED : செப் 11, 2025 03:42 AM
திருப்பூர்:உடுமலையிலிருந்து கேரளாவுக்கு, ஐஸ்கிரீம் நிறுவனங் களுக்காக யூரியா உரம் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில் நேற்று நடந்தது.
இதில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில், பயிர்களுக்கு தேவையான உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து தனியா ர் உரக்கடைகளிலும், யூரியா, டி.ஏ.பி., உரங்கள் இருப்பு இல்லை. யூரியா கேட்டால், 'நானோ' உரத்தை வாங்கச் சொல்கின்றனர்.
உடுமலையிலிருந்து கேரளா மற்றும் திருப்பூர் சாய ஆலைகளுக்கு யூரியா கடத்தப்படுகிறது. அதிகாரிகளே இதற்கு துணை போகின்றனர்.
உடுமலையில், மானிய விலையில், 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், 50 கிலோ யூரியா மூட்டை, கேரளாவில், 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதனாலேயே, திருப்பூர் மாவட்டத்திலிருந்து, கேரளாவிலுள்ள ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு யூரியா அனுப்பப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் யூரியா இருப்பு உள்ளதாக அதிகாரிகள் சொல்வது பொய். கடைகளில் நேரடி ஆய்வு நடத்தினால் உண்மை வெளி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உடனே, கலெக்டர், 'சிறப் பு பறக்கும் படை அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உரம் விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்படும்.
'தவறுகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உத்தரவிட்டார்.