/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெஞ்சமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காட்சிப்பொருளாக சிக்னல்
/
வெஞ்சமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காட்சிப்பொருளாக சிக்னல்
வெஞ்சமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காட்சிப்பொருளாக சிக்னல்
வெஞ்சமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காட்சிப்பொருளாக சிக்னல்
ADDED : செப் 30, 2024 05:53 AM

உடுமலை : உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்க, தானியங்கி சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகர எல்லையில், வெஞ்சமடை சந்திப்பு அமைந்துள்ளது. இந்த சந்திப்பின் அருகில், பி.ஏ.பி., கால்வாயையொட்டி, இருபுறங்களிலும், இணைப்பு ரோடு உள்ளது.
வெஞ்சமடை, எஸ்.வி., புரம் என பல்வேறு குடியிருப்புகளுக்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, அதிகளவு வாகனங்கள் இணைப்பு ரோட்டில் செல்கின்றன. இவ்விடத்தில் முன்பு குறுகலாக இருந்த கால்வாய் பாலத்தால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு பாலம் விரிவுபடுத்தப்பட்டு, உயர் மின்கோபுர விளக்கும், சென்டர்மீடியன், தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
எனவே போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து, தேசிய நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும் டிவைடர் வைத்தனர். இருப்பினும், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால், இணைப்பு ரோட்டுக்கு பிற வாகனங்கள் திரும்ப முடிவதில்லை.
தானியங்கி சிக்னலும் செயல்படுவதில்லை. சென்டர்மீடியனை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டதால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.
டிவைடர் அருகில், பஸ்களும் நிறுத்தப்படுவதால், இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசார் அப்பகுதியில், ஆய்வு செய்து, தானியங்கி சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; பராமரிப்பில்லாத கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

