/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழிகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியில் பக்கவிளைவு?
/
கோழிகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியில் பக்கவிளைவு?
கோழிகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியில் பக்கவிளைவு?
கோழிகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியில் பக்கவிளைவு?
ADDED : மார் 14, 2024 12:10 AM
பொங்கலுார் : விவசாயிகள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர் கள், இல்லத்தரசிகள் உட்பட பலரும் புறக்கடை கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது அவர்களுக்கு கணிசமான வருமானத்தை ஈட்டித் தருகிறது. கோழிகளை அம்மை, வெள்ளை கழிசல், சளி போன்ற கொள்ளை நோய்கள் தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறது. கோழிகள் மொத்தமாக இறந்து விடுவதால் கோழி வளர்ப்போருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த மூன்று மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. அவற்றால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் ஆர்.டி.வி.கே., என்ற தடுப்பூசி போடப்படுகிறது. அதை கோழிகளுக்கு செலுத்திய பின்பு கால் நடக்க முடியாமை, கழுத்து விரைத்து சுருண்டு கீழே விழுதல், தலை சுற்றல் போன்ற பின் விளைவுகள் ஏற்படுகிறது. அந்தக் கோழிகள் விற்பனைக்கு தகுதியற்றதாக மாறி விடுகிறது.
கோழி பண்ணைகளில் செலுத்தப்படும் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை. அரசு சார்பில் செலுத்தும் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் அதற்கு பதிலாக புதிதாக சந்தைக்கு வந்துள்ள தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

