/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு எங்களின் ஜனநாயகப்பூர்வ கோரிக்கை: திருப்பூரில் திருமாவளவன் பேட்டி

ADDED : செப் 19, 2024 07:35 AM

திருப்பூர் : 'ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு', என்பது வி.சி.க.,வின் ஜனநாயக பூர்வமான கோரிக்கையாகும்,' என திருமாவளவன் பேட்டியளித்தார்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அருகேயுள்ள பொங்குபாளையத்தை சேர்ந்தவர் காளியாதேவி, 40. கடந்த மே மாதம் நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையொட்டி, வி.சி.க., தலைவர் திருமாவளவன், நேற்று அவரது வீட்டுக்கு சென்று காளியாதேவி படத்துக்கு அஞ்சலி செய்து, அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கினார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காளியாதேவி, சந்தேகத்திடமான முறையில் உயிரிழந்துள்ளார். விபத்து என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதை அவர் குடும்பத்தினரும் வி.சி.க., வினரும், போலீசிடம் தெரிவித்து வருகிறோம்.
மாரியம்மன் கோவிலில் அருந்ததியினர் மக்கள் வழிபாடு செய்ய உரிமையை மீட்டு கொடுக்க போராடி உள்ளார். பஞ்சமி நிலங்கள் பிற சமூகத்தினரால் ஆக்கிரமிப்பாகும் நிலையில் அவற்றை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும். என வலியுறுத்தி போராடி உள்ளார்.
எனவே இதனை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும். இது விபத்தால் நிகழ்ந்தது அல்ல. இதனை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும். 2026ல், 'ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு' என்று கோவையில் வி.சி.க., சுவரொட்டி ஒட்டி இருப்பது ஒரு ஜனநாயக பூர்வமான கோரிக்கை. அதிகாரத்தை ஜனநாயகப் படுத்துவது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க.,. கூட்டணியில் இருந்து கொண்டு தான் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.