/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடவு செய்ய நாற்றுகள் தயார்; வினியோகிக்க வலியுறுத்தல்
/
நடவு செய்ய நாற்றுகள் தயார்; வினியோகிக்க வலியுறுத்தல்
நடவு செய்ய நாற்றுகள் தயார்; வினியோகிக்க வலியுறுத்தல்
நடவு செய்ய நாற்றுகள் தயார்; வினியோகிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 16, 2024 08:59 PM

உடுமலை : மழை தீவிரமடைந்துள்ள நிலையில், குடிமங்கலம் ஒன்றிய அலுவலக நாற்றுப்பண்ணையில் உள்ள நாற்றுகளை, கிராமங்களுக்கு வினியோகித்து நடவு செய்ய வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில், மரக்கன்றுகள் நடவு செய்து, பசுமை பரப்பை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக ஒன்றியம் தோறும், நாற்றுப்பண்ணை அமைத்து பராமரிக்கப்படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும், மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், நாற்றுப்பண்ணை, ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணையில், சீசன்தோறும், புளி, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இப்பண்ணையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்றுகள் நடவுக்கு தயாராக உள்ளது. ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில், பரவலாக மழை பெய்துள்ள நிலையில், மரக்கன்றுகளை ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
மேலும், நாற்றுகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு நடவு செய்யவும், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

