/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத சமத்துவபுரம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
சுற்றுச்சுவர் இல்லாத சமத்துவபுரம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுச்சுவர் இல்லாத சமத்துவபுரம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுச்சுவர் இல்லாத சமத்துவபுரம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : அக் 07, 2024 12:31 AM
உடுமலை: கோட்டமங்கலம் சமத்துவபுரத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலத்தில், கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது.
குடியிருப்பு கட்ட, 8.41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வீடுகளில், பயனாளிகள் குடியேறியதும், வடக்கு பகுதியில், மழை நீர் குடியிருப்புக்குள் வருவதை தவிர்க்கவும், பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நுழைவாயில் பகுதியிலும், சுற்றுச்சுவர் தேவை என வலியுறுத்தப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, குடியிருப்பை ஒட்டி உள்ள காலியிடத்தில், சீமை கருவேல மரங்கள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், குடியிருப்பின், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், சமத்துவபுரத்தில், ஆய்வு செய்து, சுற்றுச்சுவர் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

