/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு பருவ மழை சீசனில் தீவிரம்
/
ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு பருவ மழை சீசனில் தீவிரம்
ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு பருவ மழை சீசனில் தீவிரம்
ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு பருவ மழை சீசனில் தீவிரம்
ADDED : டிச 11, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: பருவமழை காலத்தையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோரத்தில் மரக்கன்று நடும் திட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகளில், மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை சீசனையொட்டி இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாளவாடி ரோட்டில், நாவல் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்புக்காக தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே போல், நீர்நிலை கரைகளில் பனைமர விதைகள் நடவும் இத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது.