/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைகள் முழுக்க வெண் போர்வை; மார்கழியில் தொடரும் பனி பார்வை
/
சாலைகள் முழுக்க வெண் போர்வை; மார்கழியில் தொடரும் பனி பார்வை
சாலைகள் முழுக்க வெண் போர்வை; மார்கழியில் தொடரும் பனி பார்வை
சாலைகள் முழுக்க வெண் போர்வை; மார்கழியில் தொடரும் பனி பார்வை
ADDED : டிச 19, 2025 06:10 AM

திருப்பூர்: வெயில் வெளுத்து வாங்கும் திருப்பூரில் கூட, இரவில் கடும் குளிரையும், அதிகாலையில் பனிப்பொழிவையும் பார்க்க முடிகிறது. உயரமான கோவில் கோபுரங்கள், கட்டடங்களும் பனியில் மறைந்து போகின்றன.
'நியாயமாக பார்த்தால், முன்னோர் வழியில் நாமும் இந்த பனிக்காலத்தை கொண்டாட வேண்டும்' என்கிறார், சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
அவர் கூறியதாவது:பனிக்காலம் என்பது உலக நாடுகளில் மிக முக்கியப் பருவம்; பனிக்காலம், பூமிக்கு அவசியம். பருவ மாற்றம் நிகழவில்லையெனில், எந்தவொரு உயிரினமும் பூமியில் உயிர் வாழ முடியாது. பூமியில், உயிர்கள் வாழும் தகுதியை பருவநிலை மாற்றம் தான் தீர்மானிக்கிறது.நம் மூதாதையர், மாறி வரும் ஒவ்வொரு பருவ காலங்களையும் கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டிருக்கின்றனர். பனிக்காலத்தை வாழ்வியலோடும், வாழும் நிலத்தோடும் இணைத்து வாழ்ந்தனர். கரிசல் மண்ணுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. பனிக்கால நீர் பொழிவை பயன்படுத்தி, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயிர்களை விளைவிக்கின்றனர்.
பூமியில் ஏற்கனவே உள்ள வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் பணியை, பனி செய்கிறது. மண்ணுக்கு நன்மை பயக்கும் சில உயிரினங்கள், பனிக்காலத்திற்கேற்ப, தங்களை தாங்களே தகவமைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு பருவகாலத்தின் அடிப்படை, நீர் சுழற்சி தான்.
அந்த வகையில், பனிக்காலத்தில் பனிப்பாறைகள் உருவாகி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உறையும். இவை தான் கங்கை, சிந்து, மகாநதி, பிரம்மபுத்திரா நதிகளாக உருவெடுக்கிறது; பனிக்காலம் மட்டும் இல்லாமல் போனால், இந்த நதிகள் இருக்காது; உறைதலும், உருகுதலும் பருவகால மாற்றத்தின் அடிப்படை.
ஏன் சலிப்பு? பனிக்கால குளிரில் ஏற்படும் உடல் உபாதைகள் என்ன; அதை தவிர்க்க என்னென்ன உணவு உட்கொள்வது; என்னென்ன மருந்து மாத்திரை உட்கொள்வது; தற்காத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற வாழ்வியலை முன்னோர் அறிந்து வைத்து, அதை கடைபிடித்தனர்; அதனால், அவர்கள் பனிக்காலத்தை கொண்டாட்டத்துடன் கழித்தனர். அதுபோன்றதொரு மனநிலை, மக்களிடம் தற்போது இல்லாததால் தான் பலர், பனியை சலித்துக் கொள்கின்றனர். பனியில்லாத மார்கழி இருக்கவே கூடாது.

