/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா அறக்கட்டளை துவக்கம்: சட்ட ஆலோசனை வழங்க முடிவு
/
ரிதன்யா அறக்கட்டளை துவக்கம்: சட்ட ஆலோசனை வழங்க முடிவு
ரிதன்யா அறக்கட்டளை துவக்கம்: சட்ட ஆலோசனை வழங்க முடிவு
ரிதன்யா அறக்கட்டளை துவக்கம்: சட்ட ஆலோசனை வழங்க முடிவு
ADDED : செப் 10, 2025 11:46 PM

அவிநாசி:
அவிநாசியில் துவக்கப்பட்ட ரிதன்யா அறக்கட்டளை வாயிலாக, இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுவதாக, அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதுாரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா, 27. கடந்த ஜூன் 2ல் கணவர் வீட்டாரின் வரதட்சணை மற்றும் வன்கொடுமை தாங்காமல், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரிதன்யா பிறந்த நாளான நேற்று அவிநாசியிலுள்ள சரஸ்வதி மஹாலில், ரிதன்யா சோஷியல் சர்வீஸ் என்ற அறக்கட்டளை, அவரின் பெற்றோரால் துவங்கப்பட்டது. துவக்க விழாவை முன்னிட்டு, மருத்துவ முகாம் நடந்தது. இதில், பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ரத்ததானம் ஆகியன நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ரிதன்யா பெற்றோர் கூறியதாவது:
ரிதன்யாவின் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. மேலும் வழக்கு தாமதம் தான் ஆகும்; உரிய விசாரணை முடிந்த பிறகு சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை பதிய வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு மாற்றி, எஸ்.பி., மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை, வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இறுதி வரை துணை நின்று சட்ட வழிமுறைகளின் படி வழிநடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.