/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலில் புரட்சி! 'நிட்-டெக்' கண்காட்சியில் அதி நவீன இயந்திரங்களின் அணிவகுப்பு தொழில் மேம்பாட்டுக்கு உதவும் என தொழில் துறையினர் நம்பிக்கை

ADDED : மார் 02, 2024 11:30 PM

திருப்பூர்;இயங்கு நிலையில் இயந்திரங்கள் அணிவகுத்துள்ள, 'நிட்-டெக்' கண்காட்சி, திருப்பூர் பனியன் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'ைஹடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' சார்பில், திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கண்காட்சி மைதானத்தில், 17வது 'நிட்-டெக்' கண்காட்சி நடந்து வருகிறது. 2 லட்சம் சதுரடி பரப்பளவில், 350 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னலாடை தொழில்சார்ந்த, அனைத்துவகையான இயந்திரங்களும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஊசி முதல், பேக்கிங் வரையிலான, அனைத்து இயந்திரங்களும் அணிவகுத்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு, அலங்கரிக்கப்பட்ட ஸ்டால்களில், இயங்கு நிலையில் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளாக நேற்றும், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், கண்காட்சியை பார்வையிட்டனர். முதல் நாளில் இருந்தே, பெரும்பாலான நிறுவனங்களின் இயந்திரங்கள், விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கான, அறிவிப்பு போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
சாய ஆலைகள், நிட்டிங் தொழிற்சாலைகள், பிரின்டிங் தொழிற்சாலைகள், ஆடை வடிவமைப்பு, ஆடை 'பினிஷிங்' என, பல்வேறு தேவைகளுக்கான, அதிநவீன மெஷின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து 'நிட்-டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன் கூறியதாவது:
கண்காட்சி துவங்கிய முதல் நாளிலேயே, 4,700 பேர் பார்வையிட்டுள்ளனர். தொழில்துறையினர் மட்டுமல்லாது, கல்லுாரி மாணவர்களும், தொழில்நுட்ப பகிர்வுக்காக ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். இரண்டு நாளில், 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
'நிட்-டெக்' கண்காட்சியானது, பனியன் தொழிலில் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் இயந்திரங்களின், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வகை இயந்திரத்திலும், தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதை கண்டறிய, தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கண்காட்சி, காலை 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும்; இருப்பினும், 9:30 மணிக்கே, பார்வையாளர்கள் வந்துவிடுகின்றனர். விடுமுறை நாள் என்பதால், நாளை (இன்று) கூடுதல் பார்வையாளர்கள் வருவர். கண்காட்சியில், இயங்கு நிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், காட்சிப்பொருளாக மட்டும் பார்ப்பதில்லை. இயந்திரங்களை இயக்கி பார்த்து, தொழில்நுட்ப வசதியை தெரிந்து கொள்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
கண்காட்சியில், இயங்கு நிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், காட்சிப்பொருளாக மட்டும் பார்ப்பதில்லை. இயக்கி பார்த்து, தொழில்நுட்ப வசதியை தெரிந்து கொள்கின்றனர்