ADDED : டிச 25, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நட்டு, நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர், கண்டியன்கோவிலை சேர்ந்த விவசாயிகள் கண்ணச்சாமி, சதாசிவம் ஆகியோர் போலீஸ் எஸ்.பி.,யிடம் அளித்த மனுவில், 'கண்டியன் கோவிலில், எங்களுக்கு சொந்தமான நிலத்தில், ஒருசங்கம் என்ற பெயரில், பெயர் பலகை வைத்தும், கொடிக்கம்பம் நட்டியும் ஆக்கிரமித்துள்ளனர். சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அகற்றி, தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.

