/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி சாதனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி சாதனை
முதல்வர் கோப்பை விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி சாதனை
முதல்வர் கோப்பை விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி சாதனை
ADDED : செப் 14, 2025 02:18 AM

திருப்பூர்:முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். கைப்பந்து மற்றும் கையுந்து போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். இறகுப் பந்து ஒற்றையர் பிரிவில் கவியுகன் முதலிடம், கவின்குமார் இரண்டாமிடம் பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் கிருத்திக் மற்றும் ரிபினேஷ் முதலிடம், கவியுகன் மற்றும் தர்ஷன் இரண்டாமிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில், ஒற்றையர் கிருத்தியா முதலிடம், சமீரா இரண்டாமிடம், ரித்திகா மூன்றாமிடம் பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் கிருத்தியா மற்றும் சமீரா முதலிடமும், ரித்திகா மற்றும் சியாம்ஸ்ரீ இரண்டாமிடமும் பெற்றனர். வாலிபால் போட்டியில் இரண்டாமிடம், ேஹண்ட்பால் போட்டியில் மூன்றாமிடமும் இப்பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
தடகளம், 200 மீ., ஓட்டம் சிவமூர்த்தி இரண்டாமிடம், உயரம் தாண்டுதல் தனுஷ்கா இரண்டாமிடம், மும்முறை தாண்டுதல், அபினேஷ் மூன்றாமிடம். நீச்சல் போட்டியில், நேத்ராஸ்ரீ, இரண்டாமிடம், 100 மீ., பேக்ஸ்ட்ரோக் மற்றும் 100 மீ., பிரஸ்ட் ஸ்ட்ரோக் - மூன்றாமிடம்.
ஹரண் - இரண்டாமிடம், முகில் மூன்றாமிடம். போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குநர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் வசந்த்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.