/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு வழங்கிய பிறகே மின் வழித்தட பணி; முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
/
இழப்பீடு வழங்கிய பிறகே மின் வழித்தட பணி; முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
இழப்பீடு வழங்கிய பிறகே மின் வழித்தட பணி; முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
இழப்பீடு வழங்கிய பிறகே மின் வழித்தட பணி; முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
ADDED : டிச 18, 2025 07:46 AM

உடுமலை: உடுமலை அருகே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், உயர் அழுத்த மின் வழித்தடம் அமைக்கக்கூடாது, என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக மின் தொடரமைப்பு கழகம் சார்பில், உடுமலை அருகேயுள்ள அணிக்கடவு முதல், திண்டுக்கல் தப்பகுண்டு வரை, உயர் மின் கோபுரம் அமைத்து, மின் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நுாற்றுக்கணக்கான விவசாயிகளின், விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.
மின் வழித்தடம் செல்லும் பாதையிலுள்ள, விவசாயிகளின் நிலத்திற்கான இழப்பீடு மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கான இழப்பீடும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்ற நிலையில், விவசாயிகள் உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கி விட்டு பணிகளை தொடருமாறு, கடந்த, 12ம் தேதி, பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், நேற்று மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் குணசேகரன் தலைமை வகித்தார். மின் தொடரமைப்பு கழக செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், ''விவசாயிகளுக்கு பின்னர் இழப்பீடு வழங்கப்படும்; தற்போது, பணியை தொடங்க வேண்டும், '' என தெரிவித்தனர்.
விவசாயிகள் தரப்பில்,''இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கக்கோரி, அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். பணியை முடித்து விட்டால், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாது,'' என தெரிவித்தனர்.
இதனால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கிய பிறகே, உயர் மின் கோபுரங்களில், மின் கம்பி வடம் இழுக்கும் பணி மேற்கொள்ளப்படும்,' என முடிவு செய்யப்பட்டது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வீரப்பன், தலைவர் வெள்ளியங்கிரி, துணைத்தலைவர் ராஜரத்தினம், தென்னை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சிவராஜ், பொருளாளர் கணேஷ்போஸ் தர்மராஜ் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

