/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தன்னம்பிக்கைத் தேர்களாய் உலவும் மாற்றுத்திறனாளிகள்
/
தன்னம்பிக்கைத் தேர்களாய் உலவும் மாற்றுத்திறனாளிகள்
தன்னம்பிக்கைத் தேர்களாய் உலவும் மாற்றுத்திறனாளிகள்
தன்னம்பிக்கைத் தேர்களாய் உலவும் மாற்றுத்திறனாளிகள்
ADDED : மே 27, 2024 01:34 AM

கடினப்பாதையென கதைசொல்லிக் காத்துக்கிடப்பவர்களும், நகர்ந்தால் தேயுமோ உடல் என்று அச்சப்படுபவர்களும் இங்கே ஏராளமானோர்; எக்குறையும் இல்லாதோர் பலர்; எவ்வேலையும் செய்யாமல் உளர்.இவர்களுக்குப் 'பாடம்' சொல்பவர்களாக, திட நம்பிக்கையையும், விடா முயற்சியையும் அடிமனதின்
வேர்களாக பதியமிட்டு, தன்னம்பிக்கைத் தேர்களாய் உலவும் மாற்றுத்திறனாளிகள், மனித குலத்தின் சீர்கள். இல்லாததற்காக வருந்துவதில்லை; இருப்பதைச் செம்மையாக்குவதே திறன்.
வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் ஒளிர்வர்; உரிய வசதிகளை வழங்கினால் வளர்வர்.
ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி, கிழக்கு ரோட்டரி, போனெக்ஸ் பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில பாரா சிட்டிங் (அமர்ந்த நிலையில்) வாலிபால் போட்டி, சிக்கண்ணா கல்லுாரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று நடந்தது. இதில், தன்னம்பிக்கை பொங்க, பந்தைப் பாய்ந்து அடிக்கிறார் வீரர்.

