/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்
/
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 03, 2024 08:39 PM
திருப்பூர்:'பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் நடந்த பல்வேறு கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உருவாகும் பாண்டியாறு நீரை, தெப்பக்காடு மாயாறுடன் இணைப்பதன் வாயிலாக, பவானி ஆற்றில், கூடுதலாக, 3 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் என, தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டங்களில், பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நொய்யல் ஆறு பாதுகாப்பு சங்கம், கவுசிகா நதி கரங்கள், பாண்டியாறு - சேவூர் மையம், களஞ்சியம் விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
பாண்டியாறு - மாயாறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மனு அளித்தனர். இதை தொடர்ந்து தொரவலுார், ஆலத்துார், சேவூர், அய்யம்பாளையம், புளியம்பட்டி உட்பட பல ஊராட்சிகளில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ரூ.100 கோடியில் சாத்தியம்
பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது:
ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் வறட்சி பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து குளம், குட்டைகளையும் நிரப்புவது தான் பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தின் நோக்கம். பழைய பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேற, கேரள அரசின் அனுமதி தேவை.
ஆனால், கேரளாவின் ஒத்துழைப்பு தமிழகத்திற்கு கிடைக்கப் போவதில்லை. பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை, 100 கோடி ரூபாயில் நிறைவேற்ற முடியும். திட்டம் நிறைவேறினால், மேற்கு தமிழகம், தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெறும்.
இதுதொடர்பாக கிராம ஊராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானம், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

