/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீங்கள் டயல் செய்த எண் உபயோகத்தில் இல்லை' பழமையை மாற்ற 'விரும்பாத' பல்லடம் மின் வாரியம்

ADDED : பிப் 07, 2024 01:43 AM

பல்லடம்;பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின், உபயோகத்தில் இல்லாத தொலைபேசி எண்ணால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, பஞ்சு நுால் மில், பனியன் நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்கள் அதிகம். மின் பயன்பாடு தொடர்பான புகார்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் மின் விபத்து குறித்து தெரிவிக்க, தொழில் நிறுவனத்தினர், பொதுமக்கள் அலுவலகத்தை நாடுகின்றனர்.
உதவி செயற்பொறியாளர்கள் பலரின் மொபைல் எண்கள் பயன்பாட்டில் உள்ள போதும், சிலர், மொபைல் போன் அழைப்புகளை ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, புகார் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், பெரும்பாலும் அலுவலக தொலைபேசி எண்களை பயன்படுத்துகின்றனர்.
பல்லடம், கோவை- - திருச்சி ரோடு பணப்பாளையம் அருகே, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகமும், உடுமலை ரோட்டில் செயற்பொறியாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு எண்களுமே, தற்போது உபயோகத்தில் இல்லை.
ஏதாவது மின்வாரியம் தொடர்பாக இந்த எண்களை தொடர்பு கொள்ளும் பொதுமக்கள், ஏமாற்றம் அடைகின்றனர். உபயோகத்தில் இல்லாத பழைய தொலைபேசி எண்களையே இன்னும் அறிவிப்பு பலகையில் பயன்படுத்தி வரும் பல்லடம் மின்வாரியம், இன்னும் பழமை மாறாமல் உள்ளது.
இதனால், மின்விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், அலுவலக தொலைபேசி எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.