/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் பரிசோதனை திட்டம் அரசின் சலுகைக்கு வாய்ப்பு
/
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் பரிசோதனை திட்டம் அரசின் சலுகைக்கு வாய்ப்பு
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் பரிசோதனை திட்டம் அரசின் சலுகைக்கு வாய்ப்பு
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் பரிசோதனை திட்டம் அரசின் சலுகைக்கு வாய்ப்பு
ADDED : நவ 13, 2024 04:21 AM
திருப்பூர் : திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கற்றல் குறைபாடு தொடர்பாக சான்றிதழ் பெறுவதற்காக வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, அவர்களின் மாற்றுத்திறன் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும் முகாமும் நடத்தப்படுவதால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10 மற்றும், 12ம் வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகங்கள், தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றன. இதில், மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயல்பாடு குறைந்த மாணவ, மாணவியர் சிலரும் பொது தேர்வெழுதுகின்றனர்.உடல் மற்றும் மன அளவில் எந்த பிரச்னையும் இல்லாமல், கற்றலில் மட்டும் குறைபாடுள்ள, எழுதுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும் மாணவ, மாணவியரும் இருக்கின்றனர். தேர்வு நெருங்கும் சமயத்தில் கை, காலில் அடிபட்டு, தேர்வெழுத முடியாத நிலைக்கு தள்ளப்படும் மாணவர்களும் உண்டு.
அத்தகைய மாணவர்களுக்கு பொது தேர்வை எளிமைப்படுத்தும் நோக்கில், உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல பரிசோதனை வாயிலாக அவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்பு, அவர்களின் கற்றல் திறன் அறிந்து, அவர்களுக்கு கற்றல் குறைபாடு என்ற வகைபாட்டில், மருத்துவக் குழுவினர் சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.இந்த சான்றிதழ் அடிப்படையில், பொது தேர்வின் போது, ஒரு மணி நேரம் கூடுதல் நேரம் ஒதுக்குவது, ஆசிரியரின் துணையுடன் தேர்வெழுதுவது போன்ற பல்வேறு சலுகைகளை, கல்வித்துறை வழங்குகிறது. இன்னும், 3 மாதத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில், கற்றல் குறைபாடு சான்றிதழ் வாங்க, பள்ளி தலைமையாசியர்களின் பரிந்துரை கடிதத்துடன், தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அழைத்து வந்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, சான்றிதழ் பெற்றுச் செல்கின்றனர்.
இந்த மருத்துவக்குழு கூடும் நாட்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முகாமும் நடக்கிறது. கற்றல் குறைபாடு சார்ந்த சான்றிதழ் வாங்குவதற்காக வரும் மாணவ, மாணவியரின், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாற்றத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக பெற்றோருக்கு அலைச்சல் மிச்சமாகிறது; மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சலுகையை பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.

