/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.ஐ.ஐ., கிளைக்கு புதிய நிர்வாகிகள் குழு
/
சி.ஐ.ஐ., கிளைக்கு புதிய நிர்வாகிகள் குழு
ADDED : மார் 13, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:சி.ஐ.ஐ., திருப்பூர் கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று விழா, திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நடந்தது.
விழாவில், 2024-25ம் ஆண்டுக்கான தலைவராக, அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் இளங்கோ பொறுப்பேற்றார்.
எஸ்.டி., நிட்டிங் மில்ஸ் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார். துணை தலைவராக பொறுப்பேற்றார். நிபுணர்கள் வருண் வய்டு, சுரேந்தர் ஜெய்ன், சச்சிரா சுரேந்தர்நாத், சைமா செயற்குழு உறுப்பினர் துரை பழனிசாமி, கரூர் கிளை சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் சுசீந்திரன் பேசினர்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, செயல் அறிக்கையை வெளியிட்டார்.

