/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொபைல் போன் திருட்டு; கண்டறிவதில் அலட்சியம்
/
மொபைல் போன் திருட்டு; கண்டறிவதில் அலட்சியம்
ADDED : டிச 13, 2024 10:59 PM
பல்லடம்; மொபைல் போன்கள் திருடு போவது இன்று வாடிக்கையாகி விட்டது. புகார் அளித்தால், போலீசார் இதை அலட்சியப்படுத்துவதாக போனை பறிகொடுத்தவர்கள் புகார் வாசிக்கின்றனர். போனை இழந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. திருடி சென்றவர்கள் அதை சமூக விரோத செயலுக்கும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. போலீசார் இது போன்ற புகார்களுக்கு மனுக்கள் கூட பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. புகார் அளித்தாலும் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன போனை கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதில், ''கடந்த, 2022 முதல் 2024 அக்., வரை, பல்லடம் உட்கோட்டத்தின் கீழ் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில், மொபைல் போன் காணாமல் போனதாக மொத்தம், 52 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், 40 போன் பறிமுதல் செய்யப்பட்டு, 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று பல்லடம் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

